விழுப்புரம் அருகே, திண்டிவனம் வட்டத்தில் அமைந்துள்ளது செ.கொத்தமங்கலம் கிராமம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பானை ஓடுகள், பல்லவர் கால கொற்றவை சிற்பம், நாயக்கர் கால சதிக்கற்கள் என தொடர்ச்சியான வரலாற்றுத் தடயங்கள் நிறைந்தப் பகுதி.
கடந்த ஆண்டு நவம்பரில் நாம் அங்கு மேற்கோண்ட பயணம், அந்தத் தொல்லியல் தடயங்கள் மீது புது வெளிச்சத்தைப் பாய்ச்சியது.
தமிழக அரசின் தொல்லியல் துறையின் பார்வைக்குக் கொண்டு சென்ற நாம், இவற்றைப் பாதுகாக்க வேண்டும், இங்கு மேற்பரப்பாய்வு, அகழாய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தோம்
இதனைத் தொடர்ந்து, ஆணையர் திரு.உதயச்சந்திரன் உத்தரவின் பேரில், சிதம்பரம் பகுதி தொல்லியல் அதிகாரி பொ.பாஸ்கர், கடந்த ஜனவரியில், செ.கொத்தமங்கலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அனுப்பினார்.
இப்போது நமக்குத் தொல்லியல் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது. அதில், “செ.கொத்தமங்கலம் பகுதியில் விரிவான கள ஆய்வு மேற்கொண்டு, அகழாய்வு செய்யும் இடமாகக் கண்டறிந்த பின்னர் அகழாய்வு செய்யப்படும் இடங்களின் பட்டியலில் இடம்பெற செய்யப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் அகழாய்வு செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி.
இந்தத் தகவல் இன்றைய The new Indian express நாளிதழில்…
நன்றி: செய்தியாளர் கிருத்திகா சீனிவாசன்…

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக